பொள்ளாச்சி, அக். 8: சுற்றுலா சென்ற வேன் ஆழியாறு அணைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஓட்டுனர் பலியானார்; இருவர் படுகாயம் அடைந்தனர்.
÷புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனம் கூட்டுறவு நூற்பாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 பேர் இரண்டு நாள் சுற்றுலாவாக, வேனில் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், கோவை மாவட்டம், ஆழியாறு அணைக்கும் வந்திருந்தனர்.
÷சனிக்கிழமை காலை, ஆழியாறு அணைக்குச் சென்றுவிட்டு குரங்கருவி செல்ல வால்பாறை சாலையில் வேன் சென்றது. அப்போது புலியருவி அருகிலுள்ள வளைவில் வேனை வேகமாக ஓட்டுனர் திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஆழியாறு அணை தடுப்புச்சுவரை இடித்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
÷இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விழுப்புரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுனர் பி.சுதாகர் (25), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; பலத்த காயம் அடைந்த கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் பக்கிரி (49), ஐயனார் (50) இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேன் கிளீனர் உள்ளிட்ட 14 பேர் சிறு காயங்களுடன் பொள்ளாச்சி, கோட்டூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஆழியார் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்: சோனம் வாங்சுக் மனைவி பேச்சு

மேக்கேதாட்டு அணை: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சோழர்களின் வெற்றிக்கு வித்திட்ட வடபத்ர காளியம்மன்! | திருக்கோயில் வலம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 7% சரிவு!
விடியோக்கள்


