திருப்பூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சிக்கு தனி தேர்தல் பார்வையாளர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் அக்.17, 19 என இரு கட்டங்களாக நடக்கிறது. இத்தேர்தலை பார்வையிட அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, கூடுதலாக சென்னை மாநகராட்சிக்கு 3 தேர்தல் பார்வையாளர்களும், கோவை மாநகராட்சிக்கு சந்திரசேகரன், மதுரைக்கு முருகையா, சேலத்திற்கு உத்திரக்குமரன், திருச்சிக்கு சந்திரகுமார், வேலூர் மாநகராட்சிக்கு உமாசங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகள், விதிமுறை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வது இந்த தேர்தல் பார்வையாளர்களின் முக்கியப் பணியாகும். தமிழகத்தில் பிற மாநகராட்சிகளில் தனியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு தனியாக தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
வாக்காளர்கள் அதிகளவில் நிறைந்துள்ள பகுதியாக திருப்பூர் மாநகராட்சி, மாவட்ட பகுதி விளங்குகிறது. இம்மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முறையாக கண்கா ணிக்கவும், விதிமீறல்கள் குறித்து ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் திருப்பூர் மாநகராட்சிக்கு தனியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

அசத்தும் நடிகர் சூரியின் மண்டாடி முன்வெளியீட்டு வணிகம்!

தமிழில் வாழ்த்து தெரிவித்த CJP-ன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ்! | Delhi
மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


