வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவையில் அமைகிறது இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி

கோவை, மார்ச் 28: கோவையில் அமைக்கப்படும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கென இடஒதுக்கீடு வழங்கப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:59 am

கே.கே.மணிகண்டன்

கோவை, மார்ச் 28: கோவையில் அமைக்கப்படும் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி வரும் கல்வியாண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கென இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

÷கோவை, சிங்காநல்லூரில் 27 ஏக்கர் இடத்தில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக (இ.எஸ்.ஐ) மருத்துவமனை உள்ளது. 500 படுக்கை வசதி, வெளிநோயாளிகள் பிரிவுடன் இது செயல்பட்டு வருகிறது. 1971ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை 42வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

÷பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். தொழிலாளர்களின் சம்பளத்தில் 1.75 சதவீதம், முதலாளிகள் தரப்பில் 4.75 சதவீதம் தொகை பங்களிப்பாகப் பிடித்தம் செய்யப்பட்டு, தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ. கணக்கில் சேர்க்கப்படுகிறது.

÷தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ. தொகையாக, நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் இருப்பாக உள்ளது. இந்த நிதியிலிருந்து, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிக்கப்பட்டது.

÷தமிழகத்தில், கோவை, திருப்பூர், உதகை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகம் சார்பில், சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் ரூ. 426 கோடி மதிப்பில் புதிதாக மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெறும் நிலையை எட்டியுள்ளது.

÷இந்திய மருத்துவ கவுன்சில், விரைவில் இங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. வரும் கல்வியாண்டில், இம் மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்று இ.எஸ்.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இம் மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவ படிப்பு (எம்.பி.பி.எஸ்) மட்டும் பயிற்றுவிக்கப்படும். மொத்தச் சேர்க்கை இடங்கள் 100. இதில், மாநில அரசுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு; மத்திய அரசுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது.

÷இந்நிலையில், மத்திய அரசுக்கான ஒதுக்கீட்டில் 35 சதவீதம் நீங்கலாக 15 சதவீதம் இடங்களை தொழிலாளர் குழந்தைகள், தொழிலாளர்களுக்காக இ.எஸ்.ஐ. தொகை செலுத்தும் நிறுவன உரிமையாளரின் குழந்தைகள் மற்றும் இ.எஸ்.ஐ. நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம் என்ற கொள்கை முடிவு வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது.÷மேற்கண்ட 3 தரப்பினரின் குழந்தைகளுக்கான 15 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டிலிருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடன்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மாறாக, தமிழக அரசு தனக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் இடங்களுடன் மேற்கண்ட 3 பிரிவினருக்கு என உத்தேசிக்கப்ட்ட 15 சதவீத இடத்தையும் சேர்த்து 65 சதவீத இடத்தை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

÷இதுகுறித்து தமிழக இ.எஸ்.ஐ. மண்டலக் குழு உறுப்பினர் கோவை பி.முத்து வேலப்பன் கூறியது:

÷தொழிலாளர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரி வருவதன் வாயிலாக, இங்குள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அடிப்படை வசதிகள், நவீன சிகிச்சைக்கான கருவிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செவிலியர் கல்லூரியும் நடத்தப்படுவதால், தேவையான செவிலியர் சேவையும் கிடைக்கும்.

÷இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அமைக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஏதும் வழங்கப்படவில்லை. இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் இருக்கும் தொழிலாளர்களின் பணத்தில் இருந்து தான் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. எனவே, எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் தொழிலாளர் குடும்பங்களுக்கான இடஒதுக்கீடு அவசியம் இருக்க வேண்டும் என்றார்.

÷கோவை மண்டல இ.எஸ்.ஐ. குழு உறுப்பினரான எம்எல்ஏ எம்.ஆறுமுகம் (வால்பாறை) கூறியது:

÷கோவையில் இ.எஸ்.ஐ. நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொழிலாளர்கள் செலுத்திய பணத்தில் இருந்து தான் இம்மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. எனவே, தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

÷தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர்களுக்காகச் செலுத்துவதால், அவர்களின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும். இதுபோக, 25 இடங்களை மட்டுமே மத்திய, மாநில அரசுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.