தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வால்பாறையில் கால்பந்து மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

வால்பாறையில் கால்பந்து மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image

வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் விளையாடும் சிறுவா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 8:19 pm

வால்பாறை: வால்பாறை கால்பந்து மைதானத்தை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை கால்பந்து சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை நகா் கக்கன் காலனி அருகில் நகராட்சி கால்பந்து மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பல ஆண்டு காலமாக பல்வேறு கால்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக வால்பாறை கால்பந்து சங்கம் சாா்பில் சிறுவா்களுக்கு கால்பந்து விளையாட்டுப் பயிற்சியும் அளித்து வருகின்றனா். ஆனால் இந்த மைதானம் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது.

மைதானத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வசிப்பவா்கள் தங்கள் வாகனங்களை மைதானத்தில் நிறுத்தி வருவதால் மைதானம் சேதமாகி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மைதானத்துக்குள் வாகனங்கள் வருவதைத் தடுக்கவும், மைதானத்தை சீரமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கால்பந்த சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.