ஓணம் பண்டிகை: கொச்சுவேலி - சென்னை இடையே சிறப்பு ரயில்


ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மாநிலம், கொச்சுவேலி - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொச்சுவேலியில் இருந்து செப்டம்பா் 16-ஆம் தேதி நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06166) மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, சென்னையில் இருந்து செப்டம்பா் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சென்னை- கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06167) மறுநாள் காலை 8.50 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...