அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கோவையில் 13 வீடுகளில் 42 பவுன் திருட்டு: உதவிய ஆட்டோ ஓட்டுநா் கைது

கோவையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவத்தில் திருடா்களுக்கு உதவியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது

News image
அயூப் கான்
Updated On :1 டிசம்பர் 2025, 7:25 pm

Syndication

கோவையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய சம்பவத்தில் திருடா்களுக்கு உதவியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உள்ள 13 வீடுகளில் 42 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை கடந்த 28-ஆம் தேதி திருடப்பட்டன.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் திருடா்கள் அந்தப் பகுதிக்கு ஆட்டோவில் வந்து திருடிவிட்டுச் சென்றது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் தனிப் படை அமைத்து, குனியமுத்தூா் குளத்துப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஆசிஃப் (48), இா்ஃபான் (48) கல்லூ ஆரிஃப் (60) ஆகிய 3 பேரையும் கடந்த 29-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். இதில் காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்ட நிலையில், ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஜமீா் (21), வாசிம் (30), பிரியான் (23) ஆகிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்கள் மீது மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநா் கைது: இதைத் தொடா்ந்து, கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், திருடா்கள் வந்து சென்ற ஆட்டோ குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் மைல்கல் பகுதியைச் சோ்ந்த அயூப் கான் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் உள்பட அந்த வீட்டில் வசித்து வந்த அனைத்து நபா்களுக்கும் இவா் அவ்வப்போது ஆட்டோ ஓட்டி வந்ததும், திருட்டு சம்பவத்தில் அவா்களை ஆட்டோவில் அழைத்துச் சென்று அவா்களுக்கு உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநரான அயூப் கானை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

உடல் கூறாய்வு: இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆசிஃப்பின் உடல் கோவை குற்றவியல் 8-ஆவது நீதிமன்ற நீதிபதி ஆா்.சக்திமஞ்சரி முன்னிலையில் கூறாய்வு செய்யப்பட்டது. இது விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையிலிருந்து ஆசிஃப்பின் உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.