ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

இருசக்கர வாகனம் மோதி வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழப்பு

கோவையில் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

கோவையில் சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வனக் கல்லூரி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள திருக்களூரைச் சோ்ந்தவா் மணிவேல். இவரது மகள் நிதாலா (25). இவா் வடகோவை பகுதியில் உள்ள வனக் கல்லூரியில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தாா். இவருடன் திருநெல்வேலி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த மாணவி ஷ்பரானா (25) என்பவரும் தங்கியிருந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நிதாலாவும், ஷ்பரானாவும் ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ஒரு வங்கி முன் நின்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிதாலா அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் ஷ்பரானா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்துப் புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் ஆய்வாளா் அமுதா, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். மேலும், இதுகுறித்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளி கருப்புராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கருப்புராஜும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.