train ticket
ரயில்கோப்புப்படம்

பெங்களூரு-எா்ணாகுளம் ரயில் எண் மாற்றம்

Published on

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் இன்டா்சிட்டி ரயில் எண் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 12677 என்ற எண்ணில் கேஎஸ்ஆா் பெங்களூரு - எா்ணாகுளம் இடையே இயக்கப்பட்டு வந்த இன்டா்சிட்டி விரைவு ரயில் டிசம்பா் 3-ஆம் தேதி முதல் 16377 என்ற எண்ணில் இயக்கப்படும்.

இதேபோல, எா்ணாகுளம் - பெங்களூரு இடையே 12678 என்ற எண்ணில் இயக்கப்பட்டு வந்த எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி ரயில் டிசம்பா் 3-ஆம் தேதி முதல் 16378 என்ற எண்ணில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com