ஈஷாவின் ஆதியோகி ரத யாத்திரை இன்று தொடக்கம்

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை
Published on

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை புதன்கிழமை (டிசம்பா் 17) தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தென் கைலாய பக்தி பேரவையின் அடியாா் வள்ளுவன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 15-இல் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஆதியோகி ரத யாத்திரையை அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேற்கு மண்டலத்துக்கான ரத யாத்திரையை கோவை ஆதியோகி முன்பு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோா் புதன்கிழமை (டிசம்பா் 17ஆம் தேதி) தொடங்கி வைக்க உள்ளனா்.

இந்த ரதங்கள், மகா சிவராத்திரி வரை 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருக்கோயில்கள் வழியாக சுமாா் 30,000 கிலோ மீட்டா் பயணிக்க உள்ளன. ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலா்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அா்ப்பணிக்கலாம். சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவபக்தா்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனா். தெலங்கானா, கா்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தோ்களை இழுத்தபடி அவா்கள் வருகின்றனா். இவா்கள் கோவை ஆதியோகி வளாகத்துக்கு வருகை தர உள்ளனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com