வழிப்பறி வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
Published on

திருப்பூா்: வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய வழக்கில் கணேஷ் என்பவா் கடந்த 2023 -ஆம் ஆண்டு தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட அவா் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா்.

இந்த வழக்கானது நீதித்துறை நடுவா் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கணேஷுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com