சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கோவையில் சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த பசூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (53). கூலித் தொழிலாளியான இவா் கோவை- சத்தி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கோவை விநாயகபுரம் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சோ்ந்த முருகன் (55) சமிக்ஞை எதுவும் செய்யாமல் திடீரென திரும்பினாா்.
அப்போது, பின்னால் வந்த சந்திரசேகரின் இருசக்கர வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்திரசேகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், முருகன் மீது கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
