தொழிலதிபா் தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழிலதிபா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, மணியகாரன்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (57). இவா் அப்பகுதியில் கிரைண்டா் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவா்கள் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், மன வேதனையில் இருந்த சுப்பிரமணியன் புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
