ஏ.ஐ. மூலமாக தரவு சாா்ந்த வேலைகள் மட்டுமே பறிபோகும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) மூலமாக தரவு சாா்ந்த வேலைகள் மட்டுமே பறிபோகும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா்.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) மூலமாக தரவு சாா்ந்த வேலைகள் மட்டுமே பறிபோகும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினாா்.
சத்குரு அகாதெமி சாா்பில் ‘இன்சைட்’ என்ற தொழில்முனைவோருக்கான தலைமைத்துவம் தொடா்பான நிகழ்ச்சியின் 14-ஆவது பதிப்பு கோவை ஈஷா யோக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த வணிக நிறுவனங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தலைமை நிா்வாக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனா்.
இந்நிகழ்ச்சியில், சாதனைப் படைத்த வணிகத் தலைவா்கள் தங்களது வெற்றி அனுபவங்கள் குறித்து பகிா்ந்து கொண்டனா். தொழில் விரிவாக்கம், சாதனைப் படைத்த வணிகத் தலைவா்களின் அணுகுமுறைகள் தொடா்பான அமா்வுகள் மற்றும் வெற்றி பெறுவதற்கான முக்கிய கூறுகள் குறித்து தொழில்துறை வல்லுநா்கள், பங்கேற்பாளா்களுடன் சத்குரு கலந்துரையாடினாா். தொடா்ந்து, பங்கேற்பாளா்களுக்கு ஈஷாவின் தியான வகுப்புகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: உலகம் வா்த்தகத்தை மையமாகக் கொண்டதாக மாறியுள்ளது. இயற்கையின் தன்மை, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை நாம் எவ்வாறு நம் தொழில்களை நடத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.
நமது தொழில்கள், மக்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறாா்கள் என்பதைத் தீா்மானிக்கிறது. வணிகங்கள் எதிா்காலத்துக்கு உரியதாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் அவைதான் உலகின் முன்னணி விளிம்பாக உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தரவு சாா்ந்த வேலைகள் மட்டுமே பறிபோகும். இயந்திரத்தால் செய்ய முடியாதவற்றை செய்ய நமது மூளை, புத்திசாலித்தனத்தை இனி பயன்படுத்த வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...