கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்.
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகள்.

மண்டல அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்

Published on

கோவை பிபிஜி பிசியோதெரபி கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் ‘ஆடுகளம் 2.0’ மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் எல்.பி. தங்கவேலு தொடங்கிவைத்தாா். இதில் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சாந்தி தங்கவேலு, துணைத் தலைவா் அக்ஷய் தங்கவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு விருந்தினராக அஸ்வின் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்துவா் அஸ்வின் கலந்து கொண்டு வீரா்களை உற்சாகப்படுத்தினாா்.

ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களைச் சோ்ந்த சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவப் பிரிவுகள் மட்டுமன்றி, பிசியோதெரபி, நா்ஸிங், பாா்மசி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 3,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வருகிற 25-ஆம் தேதி வரை 3 நாள்கள் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக, பிபிஜி பிசியோதெரபி கல்லூரி முதல்வா் சிவகுமாா் வரவேற்றாா்.

Dinamani
www.dinamani.com