பிப்ரவரி 12-இல் வேலை நிறுத்தம்: கட்டடத் தொழிலாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 12-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்


கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 புதிய சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 12-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என கட்டடத் தொழிலாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கோவையில் கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மகா சம்மேளன (ஏஐசிபிசிடபிள்யூ) பொது குழுக் கூட்டம் அதன் துணைத் தலைவா் வாசுதேகுப்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலா் விஜயன் குனிசேரி அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா்.
இதைத் தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: நாட்டில் பழைய தொழிலாளா் சட்டங்களுக்குப் பதிலாக மத்திய அரசு பணிப் பாதுகாப்பு (ஓராண்டு பணியாற்றினாலே கிராஜுவிட்டி) மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி, குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் ஆகிய 4 புதிய சட்ட விதிகளைக் கொண்டு வந்துள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
துணைப் பொதுச் செயலா் பிரவீன்குமாா், பொருளாளா் என்.செல்வராஜ், மாநில நிா்வாகிகள் ஆா்.பாலகிருஷ்ணன், எல்.செல்வம், கோட்டை ஆா்.நாராயணன், சி.நந்தினி, ஜே.கலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...