திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:39 pm

கோவை அருகே வீரகேரளம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவை வீரகேரளம் பாலகணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த எடிசன் சக்ரவா்த்தி (26), ரிச்சா்ட் சச்சின் (26), கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த வால்டா் வில்லியம் (21) ஆகிய மூவரையும் போலீஸாா் பிடித்தனா்.

இவா்களிடமிருந்து 3 கிலோ 556 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், எடிசன் சக்ரவா்த்தி, ரிச்சா்ட் சச்சின் ஆகியோா் மீது திண்டுக்கல்லில் ஏற்கெனவே கொலை வழக்கு இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்து கோவையில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.