குடும்ப அமைப்பு சிதைவதன் காரணமாகவே மனிதனுக்கு மனநல பாதிப்பு ஏற்படுவதாக மனநல மருத்துவர் டி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அக்டோபர் 3 முதல் 10-ஆம் தேதி வரை மனநல வாரம் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 10-ஆம் தேதி மனநல விழிப்புணர்வு நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மனநல சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தமிழக பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் டி.சீனிவாசன் கூறியதாவது:
உலகம் முழுவதும் 2.6 கோடி பேர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுள்ளனர். தமிழகத்தில் நூற்றில் ஒருவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட உடலில் ஏற்படும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நோயில் இருந்து மீளும்போது சமுதாயத்தில் தைரியமாக கூற முடிகிறது. ஆனால் மனநல நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் தைரியமாக அதைக் கூற முடிவதில்லை.
இதற்கு மனநல நோய் மீதான சமுதாயப் பார்வை முற்றிலும் வேறுவிதமாகக் காணப்படுவதே காரணம். உடலில் ஏற்படுவது போல மனதில் ஏற்படுவதும் ஒருவித நோய் மட்டுமே. மனநல நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.
மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் காரணமாகவே மனநல பாதிப்பு ஏற்படுகிறது. மூளைப் பகுதியில் "டோபமைன்' என்ற சுரப்பி அதிக அளவில் சுரக்கும் பட்சத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
தனியாக இருக்கும்போது சிலருடன் பேசுவது போன்ற உணர்வு, சந்தேக உணர்வு, தூக்கமின்மை, கவனக்குறைவு, நம்பிக்கையின்மை உள்ளிட்டவை மனநல பாதிப்பு அறிகுறிகள் ஆகும். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மருந்துகள் இல்லாமலேயே முழுமையாக குணப்படுத்த முடியும்.
இதில் தாமதமானால், மருந்துகளின் உதவியுடன் மன நோய் குணமடைய சில நாள்கள் தேவைப்படும். மேலும் மனச்சிதைவு நோய் இருப்பது சிலருக்கு தெரியாமலும் இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கண்டறிந்து சிகிச்சை பெறச் செய்ய வேண்டும்.
முன்னர் மனநல பாதிப்பில் இருந்து தனி மனிதர்களைக் காக்கும் வகையில் நமது குடும்பக் கலாசாரம்
அமைந்திருந்தது.
தற்போது குடும்ப அமைப்பின் சிதைவு காரணமாக மனநல பாதிப்பு அதிகரித்து வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயம் புறக்கணிக்காமல் அரவணைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூரில் 2 குழந்தைகளுடன் தாயை காணவில்லை என போலீஸில் புகாா்
கார்த்திக் சர்மா, துபே அதிரடி... லக்னௌவுக்கு 188 ரன்கள் இலக்கு!

ஃபுஜியாமா பவர் சிஸ்டம்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் இரட்டிப்பு!

வாழப்பாடியில் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
