ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஸ்மார்ட் சிட்டி: செப்.30-இல் கருத்துக் கேட்பு: இணையதளம், முகநூல் மூலமாகவும் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது குறித்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் செப்டம்பர் 30-ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநகராட்சி இணையதளம், முகநூல் பக்கம் மூலமாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :

கோவை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது குறித்து ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் செப்டம்பர் 30-ஆம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாநகராட்சி இணையதளம், முகநூல் பக்கம் மூலமாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, மாநகராட்சி மேயர் ப.ராஜ்குமார், ஆணையர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

 கோவையை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக கோவை நகரின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவது குறித்து பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர், தொழில்துறையினர் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்க மாநகராட்சி முடிவு செய்தது. இதுதொடர்பான ஆலோசனை, கருத்தரங்கம் நடைபெற்றது.

 இந்நிலையில் அடுத்த கட்டமாக பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரிடம் கருத்துக் கேட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மாநில அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 இதற்காக கோவை மாநகராட்சியின் இணையதளம், முகநூல் பக்கம் ஆகியவற்றில் புதிய முகவரி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை அதில் பதிவு செய்யலாம்.

 மேலும், ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை எழுத்துபூர்வமாகவும் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம்.

 மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு "என் நகரம், என் கனவு' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேபோல, மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்துக் கேட்கப்படவுள்ளது.

 இந்நிலையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் வகையில் செப்டம்பர் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், மண்டலங்கள் வாரியாகவும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படவுள்ளது.

 இதில், கருத்துகளின் அடிப்படையில் பகுதி வாரியாக அல்லது நகர் தவிர்த்த பகுதி என பிரிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நவம்பர் 30-ஆம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.