நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்படும் சிறு குறிஞ்சான் மூலிகைச் செடியின் விற்பனை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாற்று விற்பனை நிலையத்தில் அதிகரித்துள்ளது.
படரும் கொடி வகையான சிறு குறிஞ்சான் மூலிகை மலைப் பிரதேசங்களில் வளரக் கூடியது. சிறு இலைகளைக் கொண்டுள்ள இந்தத் தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவக் குணம் மிக்கதாக கருதப்படுகிறது.
இந்த மூலிகையின் இலைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாக, அண்மைக் காலமாக பொதுமக்களிடையே வேகமாக தகவல் பரவி வருகிறது. இதனால் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த செடியின் விற்பனை அமோகமாக இருப்பதாக அதன் பணியாளர்கள் கூறுகின்றனர்.
பத்து ரூபாய்க்கு விற்கப்படும் இந்த செடியை வாங்கிச் சென்று வீடுகளில் வளர்க்கும் பொதுமக்கள், நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலை வீதம் பறித்து பச்சையாக உட்கொள்கின்றனர்.
இந்த மூலிகையின் பெருமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் பாடியிருந்தாலும், ஜப்பானியர்களால்தான் இப்போது நமது நாட்டவர்களுக்கு சிறு குறிஞ்சான் வேகமாக அறிமுகமாகியிருப்பதாகக் கூறுகிறார் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருந்து, வாசனைப் பொருள்கள் துறைத் தலைவர் கே.ராஜாமணி.
ஜிம்னீக் எனப்படும் அமிலம் சிறு குறிஞ்சான் இலைகளில் உள்ளது. இதை உட்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான பொருள்கள் மீதான ஆர்வம் குறைவதாகவும், அதனால் நீரிழிவு நோய் கட்டுப்படுவதாகவும் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதனால் சிறு குறிஞ்சான் மூலிகைக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த மூலிகை செடி கோவை, கிருஷ்ணகிரி மலைப் பகுதிகளில் பரவலாக காணப்பட்டாலும் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியில் கிடைக்கும் சிறு குறிஞ்சான் பிரபலமானது. சிறு குறிஞ்சானில் மொத்தம் சுமார் 40 வகைகள் உள்ளன. அதில் கூடுதல் கசப்புத் தன்மை, அதிக சக்தி கொண்ட ரகத்தைக் கண்டறிவதற்கான இன ஆராய்ச்சி, வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் முடிவு தேசிய மருந்துப் பயிர்கள் வாரியத்துக்கு அளிக்கப்படும். அதன் பிறகு காடுகளில் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்த சிறு குறிஞ்சான், அதிக மகசூல் என்ற இலக்குடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
உற்பத்தி செய்யப்படும் மூலிகையானது மக்களுக்கும், மருந்து நிறுவனங்களுக்கும், ஏற்றுமதிக்கும் தகுந்தவாறு பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

மேற்கு வங்கம்: தலைமைச் செயலராக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்!

நாதகவை 'மற்றும் பலர்' என விமர்சித்த விஜய்: சீமானுடனான சந்திப்பு குறித்து சேரன் கருத்து!

பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
