தமிழகத்தில் தென்னை நார் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் கயிறு வாரிய மண்டல அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கயிறு வாரிய மண்டல அலுவலகம் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன் வரவேற்றார். கயிறு வாரியச் செயலாளர் குமாரராஜா முன்னிலை வகித்தார்.
இப்பணியைத் துவக்கி வைத்து கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தென்னை நாரில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க உற்பத்தியாளர்களுக்கு கயிறு வாரியம் உதவிசெய்யும். தென்னை நாரில் பல்வேறு விதமான பொருள்கள் தயாரிக்கப்
பட்டு வருகின்றன. தற்போது, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக்குப் போதுமான இயந்திர வசதிகள் இல்லை. இந்தத் தொழில் நவீன மயமாக்கப்படவேண்டும். கேரளத்தில் யூரியாவுக்குப் பதிலாக தென்னை நாரில் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது. தமிழகத்திலும் தென்னை நார் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உலக அளவிலான தென்னை நார்ப் பொருள்கள் கண்காட்சி கோவை கொடிசியாவில் வரும் ஜூலை 15இல் நடைபெற உள்ளது என்றார்.
இதில், கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஆளுங்கட்சி என்ற அதிகார போதையில்..’ தவெகவினருக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

ஆடு ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் 200 அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுகாதாரத் துறை கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதார சேவைகள் அதிகாரிக்கு பிணை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


