தமிழகத்தில், நூல் விலை குறைவு காரணமாக 300-க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் தயாரிக்கும் ஓ.இ.மில்கள் அதிக அளவில் உள்ளன. விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது நூல் தேக்கமடைந்த நிலையில், தற்போது விசைத்தறிகள் முழுவீச்சில் இயங்கியும் நூல் விலை உயராதது, கழிவுப் பஞ்சு விலை குறையாதது உள்ளிட்ட காரணங்களால் ஓ.இ.மில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஓ.இ.மில்களின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் கூறியதாவது:
விசைத்தறிகள் வேலை நிறுத்தம் காரணமாக நூல் தேக்கமடைந்து ஓ.இ. மில் உரிமையாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். அதனால், உற்பத்தி நிறுத்தப்பட்டது. விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவடைந்த நிலையில், நூல் தேவை அதிகரித்து, கிராக்கி ஏற்படும் என நம்பினோம். அதனால், விசைத்தறிகள் வேலை நிறுத்தம் முடிந்தவுடன் ஓ.இ. மில்களும் இயங்க ஆரம்பித்தன. ஆனால், நூல் விலை குறைந்துள்ளது. 20 ஆம் நெம்பர் ஸ்வெப்ட் நூல் ஒரு கிலோ ரூ. 98 ஆக இருந்தது தற்போது ரூ. 89 ஆக குறைந்துள்ளது.
20-ஆம் நெம்பர் வார்ப்பு நூல் ஒரு கிலோ ரூ. 108 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 98 ஆக குறைந்துள்ளது. மேலும், மூலப்பொருளான கழிவுப் பஞ்சு விலை குறையவில்லை. அது கிலோவுக்கு இரண்டு ரூபாய் மட்டும் குறைந்துள்ளது.
ஓ.இ.மில்களில் உற்பத்தியாகும் நூலை நஷ்டத்தில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் ஓ.இ.மில்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றார்.
தொழிலாளர்கள் ஏற்கெனவே உற்பத்தி நிறுத்தத்தால் பெரும் பாதிப்படைந்தனர். தற்போது ஓ.இ மில்கள் இயங்கவில்லை என்றால் தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தவெக அரசு: நயினார் குற்றச்சாட்டு
ராவணன் மகன்டா... ஜன நாயகன் ஓடிடி தேதி அறிவிப்பு!

சட்டம் - ஒழுங்கு பற்றி விவாதம்! ஆனால், முதல்வர் விஜய் அவையில் இல்லை! உதயநிதி ஸ்டாலின்

ஆக. 19 வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு...!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


