புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோவையில் பெயிண்டர் கொலை: சக தொழிலாளி கைது

கோவையில்  பெயிண்டரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சக தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:02 am

DIN

கோவையில்  பெயிண்டரை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த சக தொழிலாளியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் கிரிராஜ் (34). இவரது நண்பர் சக்திவேல் (35).  இருவரும் கட்டடங்களுக்கு பெயிண்டிங்
அடிக்கும் வேலை செய்து வந்தனர்.  தொண்டாமுத்தூர் வ.உ.சி.நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு புதன்கிழமை பெயிண்ட் அடிக்கச் சென்றனராம்.  பின்னர், மாலை 5.30 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு  வந்தனர்.  அப்போது ஊதியம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில்  கிரிராஜ், சக்திவேலைத் தாக்கியுள்ளார்.
 இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அருகில் இருந்த கடப்பாரையால் கிரிராஜின் தலையில் பலமாகத் தாக்கினாராம்.  இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய தொண்டாமுத்தூர் போலீஸார் சக்திவேலை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.