வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நுட்பப் போட்டி

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நுட்பப் போட்டிகள்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:05 am

DIN

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நுட்பப் போட்டிகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வட்டார வளமையத்தில் அண்மையில் நடைபெற்றன.
மாணவர்களிடையே கணினி அறிவியல் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆர்வத்தை உருவாக்கி விஞ்ஞானத் திறன்களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் நடுநிலைப் பள்ளிகளில் டெக்னோ கிளப் அமைப்பை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
இதில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பிளாரன்ஸ் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்.தன்ராஜ் தொடக்கிவைத்தார்.
40 பள்ளிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்று கணினியில் ஓவியங்கள் வரைதல், மைக்ரோ சாப்ட் மென்பொருளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை செய்து காண்பித்தனர்.
இதில், சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியப் பயிற்றுநர்கள் வளர்மதி, தமிழ்ச்செல்வி, ஜாஸ்மின், அம்சவேணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.