சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கார் மரத்தில் மோதி இருவர் சாவு

பொள்ளாச்சி அருகே  சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:51 am IST

பொள்ளாச்சி அருகே  சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம்,  பொள்ளாச்சியை அடுத்த அரசூரைச் சேர்ந்தவர் கணேசன் (40). இவர் தனது நண்பரான மஞ்சநாயக்கனூரைச் சேர்ந்த தங்கவேல் (22) என்பவரை அழைத்துக்கொண்டு காரில் நா.மூ.சுங்கத்தில் இருந்து அரசூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். காரை கணேசன் ஓட்டிச் சென்றுள்ளார்.  அப்போது,  மஞ்சநாயக்கனூர் பிரிவு அருகே கார்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோர  மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கணேசன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தங்கவேல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து  ஆழியாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.