காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்து தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு கட்சிகள் அரசியல் லாபம் தேடுகின்றன என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. கயிறு வாரியம் சார்பாக விவசாய இடுபொருள்கள் வழங்க ரூ. 24 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விவசாய இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி விவசாயிகளுக்கு இடுபொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்னை வாரிய உறுப்பினர் மோகன்ராஜ், வழக்குரைஞர்கள் துரை, சிவகுமார், பாஜக நிர்வாகிகள் தனபாலகிருஷ்ணன், சேகர், கௌரி முன்னிலை ஆகியோர் வகித்தனர். மெட்ராஸ் பெர்ட்டிலைசர் நிறுவன இயக்குநர் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீரா பானம் உற்பத்தி செய்பவர்களுக்கு மானியம் வழங்கவும், பொள்ளாச்சியில் நீரா விற்பனை மையம் அமைக்கவும் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காவரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர முடியாது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை வைத்து பல்வேறு கட்சிகள் அரசியல் லாபத்திற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றன. திராவிடக் கட்சிகளுக்கு தற்போது ஆதரவு குறைந்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!
பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

போலி கையொப்ப விவகாரம்: மமதா வீட்டில் சோதனை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


