மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

கோவில்பாளையத்தில் திமுகவினர் சாலை மறியல்

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில்  சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:53 am IST

எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவில்பாளையத்தில்  சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையன், மாவட்டப் பொருளாளர் மணி (எ) விஜயகுமார், ஒன்றியப் பொருளாளர் ராசு (எ) பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வெள்ளாணைப்பட்டி  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஆர்.ராஜன், பார்த்திபன், ஜீவா, மகளிர்அணி சார்பில் ரதி மனோகர், காங்கிரஸ் கட்சி சார்பில் நாகராஜ், மதிமுக சார்பில் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மறியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து,  பின்னர் மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.