கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, சுண்டக்காமுத்தூர் அருகே பாங்க் வீதியைச் சேர்ந்தவர் கமலம் (70). இவரது கணவர் சின்னப்பன் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி வீட்டில் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்கக் கம்மல் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து பேரூர் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மூதாட்டி கொலை தொடர்பாக சுண்டக்காமுத்தூர் காமாட்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








