கடும் வறட்சி காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடை விடுமுறைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்வர். தமிழகத்தில் உள்ள மற்ற மலைப் பகுதியில் இருப்பதுபோல வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சமும் ஏற்படுத்தப்படவில்லை.
இப்பகுதியில் உள்ள ஆறுகள், நீர்வீழ்ச்சிக்கு சென்று குளிப்பது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாகவே வால்பாறையில் கடுமையான வெயில் நிலவி வருவதால், வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதன் காரணமாக அனைத்து ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் நீரின்றி வறண்டுள்ளன. இந்தக் காலநிலை மாற்றம் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








