முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

குண்டு வெடிப்புக் கைதியை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் லீக் தலைவர் கோரிக்கை

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அபுதாஹிரை  உடல்நலக் குறைவு காரணமாக விடுதலை செய்ய வேண்டும் என்று, இந்திய

Updated On :18 ஏப்ரல் 2018, 9:23 am IST

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அபுதாஹிரை  உடல்நலக் குறைவு காரணமாக விடுதலை செய்ய வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். 
கோவை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குண்டு வெடிப்புக் கைதி அபுதாஹிரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எம்.அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  
திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், கோவை மத்தியச் சிறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் எவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை . அவர்களை விடுதலை செய்யக் கூடாது என வேறு எங்கிருந்தாவது அழுத்தம் வருகிறதா என்றும் தெரியவில்லை. 
அதே வேளையில் குணப்படுத்த முடியாத நோயால் பல ஆண்டுகளாக அபுதாஹிர் உயிருக்குப் போராடி வருகிறார்.  எனவே, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை கருணை அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.