சூலூர் அருகே உலக புத்தக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சூலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் உலக புத்தக தின விழா மற்றும் பேரணி நடைபெற்றது. விழாவை மாவட்ட நூலக ஆணைக்குழு, ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலகம், வாகராயம்பாளையம் கிளை நூலகம் மற்றும் கணியூர் பகுதி நேர நூலகம் ஆகியன இணைந்து நடத்தின.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஊஞ்சப்பாளையம் ஊர்ப்புற நூலக அலுவலர் லட்சுமணசாமி வரவேற்றார். இதில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. அதன்பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊஞ்சப்பாளையம் பகுதி பள்ளி மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில், 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








