ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இலவச எக்கோ இருதயப் பரிசோதனை முகாம்

மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ஏழை,   எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கோவை அபிராமி மருத்துவமனை

Updated On :18 ஏப்ரல் 2018, 9:19 am IST

மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ஏழை,   எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கோவை அபிராமி மருத்துவமனை சார்பில் திங்கள்தோறும் இலவச  எக்கோ இருதயப் பரிசோதனை முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு  மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமை வகித்து  எக்கோ பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தார். 
கோவை அபிராமி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். 
இலவச எக்கோ இருதயப் பரிசோதனை சேவை  தலைமை மருத்துவர் சேரலாதன் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1,200 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிரசவம், அறுவை சிகிச்சை  என 130 பேர் வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.  தற்போது இருதய நோயாளிகளின் நன்மைக்காக கோவை அபிராமி மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இலவச எக்கோ இதயப் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.  இருதயப் பிரச்னை உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். 
பரிசோதனையில் இருதய பாதிப்புக் கண்டறியப்பட்டால் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை அபிராமி மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் துடியலூர் லஷ்மி மருத்துவமனை சார்பில் வியாழக்கிழமைதோறும் இலவச எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார், திட்ட அலுவலர் நந்தகுமார், செவிலியர்கள் சாரதாமணி, மும்தாஜ், நிர்மலா உள்பட பலரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.