2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சந்தனமரம் வெட்டிக் கடத்தியதாக இருவர் கைது

பொள்ளாச்சி வனச் சரகத்தில் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியதாக இருவரை வனத் துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:18 am

DIN

பொள்ளாச்சி வனச் சரகத்தில் சந்தனமரங்களை வெட்டிக் கடத்தியதாக இருவரை வனத் துறையினர் கைது செய்தனர். 
பொள்ளாச்சி வனச் சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத் துறையினர் ரோந்து பணியில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சர்க்கார்பதி அருகே ஆழியாறு ஊட்டுக்கால்வாய் பகுதியில் வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.  விசாரணையில் காரில் வந்தவர்கள்,  கேரள மாநிலம்,  மன்னார்காட்டை சேர்ந்த அஸ்ரப்(47),  அவரது சகோதரர் முகமது ரியாஸ் (34)  என்பதும்,   அவர்கள் காரில் 16 கிலோ சந்தன மரங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 
தொடர்ந்து நடத்திய  விசாரணையில்,  அவர்கள்  கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும்  சர்க்கார்பதி பகுதிக்கு வந்து சந்தன மரங்களை வெட்டியுள்ளது தெரியவந்தது.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சந்தன கட்டைகள் மற்றும் அதை அறுப்பதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.