செல்லிடப்பேசி மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட் பெறும் வசதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அறிமுகம்

முன் பதிவில்லாத ரயில் டிக்கெட்டுக்களை செல்லிடப்பேசி மூலம் பெறும் வசதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

முன் பதிவில்லாத ரயில் டிக்கெட்டுக்களை செல்லிடப்பேசி மூலம் பெறும் வசதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் சேவைகளைப் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் நவீன முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  அதனடிப்படையில் தற்போது செல்லிடப்பேசியிலிருந்து முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை பெறும் வசதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
இதற்கு செல்லிடப்பேசியில் UTS ON MOBILE - என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பின்னர் அதில் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்ய  வேண்டும். தொடர்ந்து நண்ஞ்ய் மல் எனும் ஞல்ற்ண்ர்ய் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  அதன்பிறகு பெறப்படும்  பாஸ்வேர்டை வைத்து டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும்.  ரயில் நிலைய வளாகத்திலிருந்து 25 மீட்டருக்கு மேல் உள்ள தொலைவிலிருந்தும்,  5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பகுதிகளிலிருந்தும் பயண சீட்டுகளையும்,  சீசன் டிக்கெட்டுக்களையும்,  பிளாட்பார்ம் டிக்கெட்டுக்களையும் செல்லிடப்பேசியிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.  இதில் சீசன் டிக்கெட்டுக்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் ரூ. 100 செலுத்தி செல்லிடப்பேசியில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
நெட் பேங்கிங் மூலமும்,  டெபிட் கார்டு,  கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகரிடம் செல்லிடப்பேசியில் பதிவு செய்து வரும் டிக்கெட்டை காண்பித்தாலே போதும். இத்திட்டத்தை ஊக்குவிக்க ஏப்ரல் 30 வரை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய பயணச்சீட்டு அலுவலகத்தில் பயணம் செய்யத் தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒருவருக்குப் பரிசு வழங்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com