இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி
இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார தினத்தையொட்டி


இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை சார்பில் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார தினத்தையொட்டி மினி மாராத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே இருந்து தொடங்கிய 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ தொலைவு கொண்ட மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா துவக்கிவைத்தார்.
இந்தப் போட்டிகளில் 900-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் கிடைக்கும் தொகை, குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். நான்கு பிரிவுகளில் நடைபெற்ற
இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் மொத்தம் 12 பேர் வெற்றி பெற்றனர். இதில் 10 கி.மீ. ஆண்கள் பிரிவில் ரமேஷ்குமார் முதலிடமும், சரத்குமார் இரண்டாம் இடமும், உதயகுமார் மூன்றாமிடமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் சோனியா, சினேகா, கோகிலா ஆகியோர் முறையே மூன்று இடங்களைப் பிடித்தனர்.
5 கிமீ ஆண்கள் பிரிவில் தருண் வெங்கடேஷ், ஆனந்தராஜ், மோகன் ஆகியோரும், பெண்கள் பிரிவில் செளமியா, சுவாதி, திவ்யா ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளையின் தலைவர் டாக்டர் வினோத்குமார், செயலாளர் டாக்டர் ராஜ்குமார், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் எல்.பி.தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...