பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடந்த டி.ஜெ. பிறந்தநாள் விநாடி-வினா போட்டியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டி.ஜெயவர்த்தனவேலுவின் பிறந்த நாளை ஒட்டி, இப்பள்ளியில் மாவட்ட அளவில் பள்ளிகள் பங்கேற்கும் விநாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது.
திங்கள்கிழமை நடந்த இந்தப் போட்டியை ஜி.கே.டி. பள்ளியின் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
28 பள்ளிகளிலிருந்து 168 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு 6 குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளியின் கலையரங்கில் விநாடி- வினா போட்டி நடைபெற்றது. முதலிடம் பெற்ற யுவபாரதி பள்ளிக்கு ரூ. 10 ஆயிரத்தையும், இரண்டாமிடம் பெற்ற சச்சிதானந்தா பள்ளிக்கு ரூ. 5 ஆயிரத்தையும், மூன்றாமிடம் பெற்ற வித்யா நிகேதன் பள்ளிக்கு ரூ. 3 ஆயிரத்தையும் ரொக்கப் பரிசுகளாக பள்ளித் தாளாளர் ஆர்.ராஜேந்திரன் வழங்கினார்.
பள்ளியின் செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், முதல்வர் சித்ரா ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









