மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

அம்மன் கோயிலில் சுவாமியின் தாலி திருட்டு

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:05 am IST

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தில் உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. செவ்வாய்க்கிழமை கோயிலில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி வழக்கம்போல கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். 
கோயிலுக்கு அவர் புதன்கிழமை காலை  வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. 
தவிர உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.