சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பல ஆண்டு காலமாக இருந்த சலுகைகள் ரத்து:  தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு

பல ஆண்டு காலமாக இருந்த சலுகைகளை ரத்து செய்ததால் கருமலை எஸ்டேட்  தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Published On :

பல ஆண்டு காலமாக இருந்த சலுகைகளை ரத்து செய்ததால் கருமலை எஸ்டேட்  தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பல ஆண்டு காலமாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் ஏராளமானேர் உள்ளனர். தொழிலாளர்களின் ஆயுள் காப்பீடு, தபால் நிலையத்தில் உள்ள மாத சேமிப்புக் கணக்கு, வருங்கால வைப்பு நிதி, குடியிருப்புக்கு வழங்கப்பட்டுள்ள கேபிள் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. 
பின்னர் இத்தொகையை நிர்வாகத்தினர் அந்தந்தத் துறைக்குச் செலுத்தி வருவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வால்பாறையில் உள்ள கருமலை  குரூப் எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான இந்தச்  சலுகைகளை கடந்த மாதம் முன் அறிவிப்பின்றி எஸ்டேட் நிர்வாகத்தினர் நிறுத்தியுள்ளனர். இந்தச் செயலால் பாதிப்படைந்துள்ள தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.