வனவிலங்கு ஆர்வலர்களுக்கு விருது

கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வனவிலங்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் விருதுகளை வழங்கினார்.
Published on
Updated on
1 min read

கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வனவிலங்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆட்சியர் த.ந.ஹரிஹரன் விருதுகளை வழங்கினார்.
சுதந்திர தின விழாவில் ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, கோவை வ.உ.சி. மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், வனக் கால்நடை மருத்துவர் கே.அசோகன், கோவை இயற்கை பாதுகாப்புச் சங்கத் தலைவர் என்.ஐ.ஜலாலுதீன், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன், நித்யன் மணியரசு, ஆனஸ் அஹமது ஆகியோருக்கு ஆட்சியர் விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.
மனித - விலங்கு மோதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வன விலங்குகள், வனப் பகுதிகளைக் காப்பாற்றுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கருத்தரங்குகள், கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் போன்ற செயல்களுக்காக இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.