சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

காளப்பட்டியில் திமுகவினர் அமைதிப் பேரணி

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி காளப்பட்டியில் திமுக சார்பில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:49 am IST

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி காளப்பட்டியில் திமுக சார்பில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாக்கவுண்டர் (எ)கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி மாலதி, வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், குமரேசன், கந்தசாமி, கதிர்வேல், வசந்தராஜ், விளவை மயில்சாமி, மோகன் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
காளப்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து அமைதிப் பேரணியை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர். ராமசந்திரன் துவக்கி வைத்தார். காளப்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி கோவை விமான நிலையம் சந்திப்பு வரை நடைபெற்றது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர்  மற்றும் அனைத்து கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.