திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி காளப்பட்டியில் திமுக சார்பில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாக்கவுண்டர் (எ)கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகி மாலதி, வட்டச் செயலாளர்கள் பிரபாகரன், குமரேசன், கந்தசாமி, கதிர்வேல், வசந்தராஜ், விளவை மயில்சாமி, மோகன் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காளப்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து அமைதிப் பேரணியை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர். ராமசந்திரன் துவக்கி வைத்தார். காளப்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி கோவை விமான நிலையம் சந்திப்பு வரை நடைபெற்றது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்துக்கு திமுகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


