பொள்ளாச்சி அருகே ஆற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தைச் சேர்ந்தவர் மாசியப்பன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகன் ஜெய்கிருஷ்ணா (ஒன்றரை வயது).
இந்நிலையில், நந்தினி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெய்கிருஷ்ணா, அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்பதற்குள் அது உயிரிழந்தது. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









