தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பாரதியார் பல்கலை. பதிவாளர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க குழு அமைப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:33 am IST

கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழு உறுப்பினரும், முதன்மைச் செயலருமான மங்கத் ராம் சர்மா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணைவேந்தர் குழு உறுப்பினர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 இந்தக் கூட்டத்தில், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 3 பேர் அடங்கிய குழுவை அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 இதற்கிடையே, ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாகவும், இதற்கு அரசுச் செயலர் கோபமடைந்ததாகவும், இதையடுத்து ஏற்பட்ட கூச்சல் - குழப்பம் காரணமாக கூட்டம் முடிவுக்கு வந்ததாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.