எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

பெரியார் நினைவு நாள்: பல்வேறு அமைப்பினர் மரியாதை

பெரியாரின் நினைவு நாளையொட்டி கோவையில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:35 am IST

பெரியாரின் நினைவு நாளையொட்டி கோவையில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், சித்தாபுதூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலையில், மாநில அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 திராவிடர் கழகத்தின் சார்பில் புலியகுளத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மண்டல செயலர் சந்திரசேகர் தலைமையில் மூத்த தொண்டர் வசந்தம் கு.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மாவட்டத் தலைவர் சிற்றரசு, செயலர் செந்தில்நாதன், பொதுக் குழு உறுப்பினர் அன்பரசு, கவி.கிருட்டிணன், புலியகுளம் வீரமணி, சக்தி, மே.ப.ரங்கசாமி, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.