பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மனித மாண்பிற்கான தேசிய நெடும் பயண அமைப்பினர் கோவை வருகை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித 

Updated On :31 டிசம்பர் 2018, 8:45 am IST

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனித மாண்பிற்கான தேசிய நெடும் பயண அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை கோவை வந்திருந்தனர்.
 பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மனித மாண்பிற்கான தேசிய நெடும் பயண அமைப்பினர்  நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மும்பையில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் நபர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் பயணத்தை 2019 பிப்ரவரி 22 ஆம் தேதி தில்லியில் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதன் ஒரு பகுதியாக இந்த அமைப்பினர் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். உக்கடம் சிஎம்சி காலனிக்குச் சென்ற இந்த அமைப்பினர், அங்குள்ள பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்வது, அடிப்படை சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்துக் கலந்துரையாடினர்.
   அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர் கூறியதாவது:
 பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு அரசுதான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
   கோவையில் இந்த அமைப்பின் பயணத்துக்கான ஏற்பாடுகளை சமூக நீதிக்கான முன்னணி  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.