கோவையில் ப்ளோ மகளிர் அமைப்பு (ஃபிக்கி) மற்றும் தேசிய பங்குச் சந்தை சார்பில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தேசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் உதவி மேலாளர் சிவபாஜம் தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்தியாவில் பங்குச் சந்தையில் மொத்தம் 1.73 கோடி பேர் முதலீடு செய்துள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்காக நாடு முழுவதிலும் 30 ஆயிரம் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் வரை சுமார் ரூ.175 லட்சம் கோடிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவுக்கு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் முதலீட்டு மையங்கள் மூலமாகவே முதலீடு செய்வது நல்லது. சில முதலீட்டு மையங்கள் இலவச சேவையை வழங்கினாலும், சில மையங்கள் தரகு கூலியை பெற்றுக் கொண்டு பணிகளை செய்கிறது.
எதில்முதலீடு செய்வது என்றாலும், உங்களின் வங்கிக் கணக்கு மூலமாகவே செய்ய வேண்டும். குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்வோர், அவர்களின் பெயரிலேயே முதலீடு செய்து கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவை கேப்பிடல் நிறுவன கிளைத் தலைவர் வீரமணி, ப்ளோ மகளிர் அமைப்பின் தலைவர் ஜெயந்தி மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

