குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, பெற்றோர் ஒழுக்கமாக நடந்து காட்ட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறியுள்ளார்.
குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் குறித்தும், குழந்தைகளைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் "எப்படித்தான் வளர்ப்பதோ?' என்ற நிகழ்ச்சி கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
இதில், 7 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கான இரண்டாவது வார நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பிருந்தா ஜெயராமன் பேசியதாவது: பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே கண்கண்ட முதல் உதாரணம். பிள்ளைகளின் எதிரில் பொய் பேசுவது, மறைத்துப் பேசுவது, புறம்பேசுவது, சப்தமாகப் பேசுவது, அடிப்பது போன்ற செயல்களை பெற்றோர்கள் செய்தால் பிள்ளைகளும் அதையே பிரதிபலிப்பார்கள். பிள்ளைகள் மேம்பட்டவர்களாகவும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் எதிரில் பொய் பேசாமல், மறைக்காமல், நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. அப்போதுதான் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் நாம் வெற்றியடைய முடியும். பிள்ளைகள் செய்யும் சிறிய தவறுகளுக்கு தண்டனைகள் கொடுப்பது, அடிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அன்பினாலும், பொறுமையினாலும் மட்டுமே அவர்களை நல்வழிக்கு மாற்ற முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிமுக படப்பிடிப்பு அப்டேட்!
ஜன்னல் ஓரத்தில்...

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK


