கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஒன்றிய அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை என புகார் இருந்து வருகிறது. இதுகுறித்து, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமனுக்கு புகார் சென்றது.
அதையடுத்து, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்படி, கிணத்துக்கடவு தனியார் திருமண மண்டபத்தில் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிணத்துக்கடவு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த குறைதீர் கூட்டத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துக்கருப்பண்ணசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி, அதிமுக நிர்வாகிகள் டி.எல்.சிங், மூர்த்தி, வீராசாமி, வழக்குரைஞர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோழனூர், வரதனூர், கக்கடவு, காணியாலாம்பாளையம், கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், ஆண்டிபாளையம், சிறுக்களந்தை, பெரிய களந்தை, காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், மெட்டுவாவி, பணப்பட்டி, வடசித்தூர், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, குருநல்லிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், ஆண்டிபாளையம், நல்லட்டிபாளையம், முள்ளுப்பாடி ,கோவில்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், கோவிந்தாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குறைதீர் கூட்டத்தில் குவிந்தனர்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மனுக்களை வழங்கினர். காலை முதல் மதியம் 2.30 மணி வரை தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் ஒரே நாளில் குவிந்ததால் அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டது.
இந்த மனுக்களின் மீது பரிசீலனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் உறுதி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில், 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. வட்டாட்சியர்கள் விமலா, ஜெயந்தி உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்பு

பேரவைத் தோ்தலில் மக்கள் மாயவலையில் வீழ்ந்துவிட்டனா்! முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு





