ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோவையில் 2 பெண்களிடம் 11.5 பவுன் நகை பறிப்பு

கோவையில் இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 11.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர். 

Updated On :23 ஜூலை 2018, 7:38 am IST

கோவையில் இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 11.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர். 
கோவை மாவட்டம், ஆனைமலையைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன் மனைவி ரூத்குணசீலி (53).   சிங்காநல்லூரில் உள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை கோவை வந்துள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென ரூத்குணசீலியின் கழுத்தில் இருந்த 5.5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரூத்குணசீலி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோவை ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடிவீதியில் வசித்து வருபவர் காதர் பாட்ஷா மனைவி பிர்தோஷ் (44).  இவர் சனிக்கிழமை இரவு தனது மகன் அலிலுல்லாவுடன்இருசக்கர சக்கர வாகனத்தில் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிர்தோஷின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் ஒரே நாளில் இரு பெண்களிடம் மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.