கோவையில் இரு பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 11.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், ஆனைமலையைச் சேர்ந்தவர் ஜான் கிருபாகரன் மனைவி ரூத்குணசீலி (53). சிங்காநல்லூரில் உள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக சனிக்கிழமை கோவை வந்துள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென ரூத்குணசீலியின் கழுத்தில் இருந்த 5.5 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ரூத்குணசீலி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடிவீதியில் வசித்து வருபவர் காதர் பாட்ஷா மனைவி பிர்தோஷ் (44). இவர் சனிக்கிழமை இரவு தனது மகன் அலிலுல்லாவுடன்இருசக்கர சக்கர வாகனத்தில் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிர்தோஷின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் ஒரே நாளில் இரு பெண்களிடம் மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


