சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சூலூர் வட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை

சூலூர் வட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை தோதனை மேற்கொண்டனர்.

Updated On :26 ஜூன் 2018, 7:17 am IST

சூலூர் வட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை தோதனை மேற்கொண்டனர். இதில், அதிக அளவிலான கலப்பட, சாயமேற்றப்பட்ட உணவுகள், காலாவதியான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கோவை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை உத்தரவின்படி சூலூர் வட்டத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது. 
இச்சோதனையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சக்திவேல், குமரகுரு, மதன்மோகன், கோவிந்தராஜன், வெங்கடேசன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
கருமத்தம்பட்டி, நால்ரோடு,  சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 63 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 
இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போலி தேயிலைத் தூள், அழுகிய பழங்கள், காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இப்பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீதும், விற்பனையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.